சூ. 166 :

குறையென் கிளவி முன்வரு காலை

நிறையத் தோன்றும் வேற்றுமை யியற்கை

(24)
 
க-து:

குறை என்னும் சொல்வரின் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்: குறை    என்னும்  அளவுப்  பெயர் மேற்கூறிய அளவைப்
பெயர்களின்முன்    வருமிடத்து,    வேற்றுமைப்   புணர்ச்சிக்குக்  கூறிய
இலக்கணத்தைப் பெற்றுச் சாரியை இல்லாத குறை தோன்றாமல்    நிறைவு
பெறத் தோன்றும்.
 

எ-டு: உரிக்குறை, தொடிக்குறை, காணிக்குறை, கொட்குறை,  காற்குறை
எனவரும். இவற்றையும் உம்மை  விரித்துக்    கொள்க.  குறை  என்பதன்
பொருட்டாய்   வரும்    கூறு  என்பதற்கும் இவ்விதி ஒக்கும்.  உரிக்கூறு
எனவரும்.