குற்றியலுகர ஈற்று அளவைப் பெயர்க்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
பொருள்: குற்றியலுகர ஈற்று அளவைப் பெயர்களின்முன் குறை என்பது புணருமிடத்து ‘இன்’ சாரியை பெறும்.
எ-டு: உழக்கின்குறை, ஆழாக்கின்குறை, கஃசின்குறை, கழஞ்சின்குறை, ஒன்றின்குறை, பத்தின்குறை எனவும் உழக்கின்கூறு,ஆழாக்கின்கூறு எனவும் வரும். (உழக்கின்குறை = உழக்கும் குறையும் என்பது பொருள்) குற்றியலுகரக்கு என்பது செய்யுள் விகாரம். ஏகாரம் இசைநிறை.