சூ. 168 :

அத்திடை வரூஉம் கலமென் அளவே

(26)
 
க-து:

கலம் என்னும் அளவுப் பெயருக்குச் சிறப்புவிதி கூறுகின்றது.
 

பொருள்: கலமென்னும்  அளவுப் பெயர் குறை என்னும் சொல்லொடு
புணருங்கால் அத்துச் சாரியை இடையே வரும்.
 

எ-டு: கலத்துக்குறை. (கலமும் குறையும் என்பது பொருள்)