சூ. 169 : | பனையென் அளவும் காவென் நிறையும் |
| நினையுங் காலை இன்னொடு சிவணும் |
(27) |
க-து: | பனை, கா என்னும் அளவைப் பெயர்கட்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: ஆராயுங்கால் பனை என்னும் அளவுப் பெயரும் காவென்னும் நிறைப் பெயரும் குறை என்பதனொடு புணருமிடத்து இன் சாரியையொடு பொருந்தி வரும். |
எ-டு: பனையின்குறை, காவின்குறை எனவரும். (பனையும் குறையும்; காவும் குறையும் என்பன பொருள்) |
‘‘நினையுங்காலை’’ என்றதனான் பனைக்குறை,காக்குறை என வேற்றுமை இயற்கை நிறையத் தோன்றுதலும் கொள்க. |