சூ. 175 :

யாவென் வினாவும் ஆயியல் திரியாது

(3)
 
க-து:

‘யா’   வென்னும்   வினாப்   பெயர்க்கும்   அவ்விதி ஒக்கும்
என்கின்றது.
 

பொருள்: யா என்னும்   ஓரெழுத்தொரு  மொழியாகிய ஆகார ஈற்று
வினாப்பெயரும் அவ்விலக்கணத்திற்றிரியாது வரும்.
 

எ-டு: யாவற்றை,  யாவற்றொடு, யாவற்றுக்கு,  யாவற்றின்,   யாவற்றது,
யாவற்றுக்கண் எனவரும். இப்பெயர்    சாரியை   இன்றிவரின்   பொருள்
கவர்க்கும் ஆதலின் ‘திரியாது’ என வலியுறுத்தப் பெற்றதென்க.