சூ. 180 :

ஓகார இறுதிக்கு ஒன்னே சாரியை

(8)
 
க-து:

ஓகார ஈற்றுச் சொல்லொடு உருபு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: ஓகார  ஈற்றுச்  சொல்லிறுதியொடு உருபு புணருங்கால் ஒன்
என்பது சாரியையாகவரும். ஏகாரம் இசைநிறை.
 

எ-டு: கோஒனை,  கோஒனொடு,  கோஒற்கு எனவரும். பிறவற்றொடும்
ஒட்டிக் கொள்க. இதனை அளபெடை போல இசைத்தல் வேண்டும்.