ஞநவென் புள்ளிக்கு இன்னே சாரியை
ஞ ந என்னும் புள்ளியீற்றுச் சொல்முன் இன்சாரியைபெறுமென்கின்றது.
பொருள்: ஞகர நகரப் புள்ளிகளை ஈறாக உடைய சொற்களின் முன்உருபு வருங்கால் இன் சாரியை பெறும்.
எ-டு: உரிஞினை, உரிஞினொடு, பொருநினை, பொருநினொடுஎனவரும். இவை தொழிற்பெயர். வெரிநினை, வெரிநினொடு இது பெயர்.ஏனை உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (வெரிந் = முதுகு) ஏகாரம்இசைநிறை.