சூ. 184 :

ஏனை வகரம் இன்னொடு சிவணும்

(12)
 
க-து:

தெவ் என்னும் சொல்முன் சாரியை வருமாறு கூறுகின்றது.
 

பொருள்: வகர   ஈற்று   மொழி  நான்கனுள் சுட்டுப் பெயரொழிந்த
ஏனைத்   தெவ்    என்னும்   உரிச்சொல்லின்   வகரத்தின் முன் உருபு
புணருங்கால் இன் சாரியையொடு பொருந்தி வரும்.
 

எ-டு: தெவ்வினை,  தெவ்வினொடு,  தெவ்விற்கு எனவரும். பெயரினும்
வினையினும்   உரிச்சொல்  மெய்தடுமாறி வருமென்பதனான் தெவ் என்பது
பெயராக   நின்றது.  தெவ் - பகைமை. அஃது உருபேற்றலைக் கூறுதலான்
அது  வினைச்சொல்லாகத் தடுமாறாது என்பது பெறப்படும்.