சூ. 185 :

மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை

(13)
 
க-து:

மகர ஈற்றுச் சொற்களின் முன்வரும் சாரியை கூறுகின்றது.
 

பொருள்: மகர   ஒற்றினை   ஈறாக உடைய பெயர்கட்கு முன் உருபு
வருங்கால் பெறும் சாரியை அத்து என்பதேயாம். ஏகாரம் தேற்றம்.
 

எ-டு :மரத்தை,  மரத்தொடு   எனவும்;  மகத்தை, மகத்தொடு எனவும்
வரும். ஏனைய உருபுகளொடும் ஒட்டிக் கொள்க. (மகம்-நாட்பெயர்.)
 

நிலைமொழி  மகரக்கேடு   புள்ளிமயங்கியலிற்  கூறப்பட்டது. அவ்வழி
அவை அகரஈறாதலின் அத்தின் அகரம் கெடுமென்க.