சூ. 186 : | இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே |
(14) |
க-து: | ஒரு சார் மகர ஈற்றுச் சொற்குச் சிறப்புவிதி கூறுகின்றது. |
பொருள்: மகர ஈற்றுச் சொற்களுள் இன்சாரியை இடையே வரும் சொற்களும் உளவாம். ஆர் - அசை, ஏ - இசைநிறை. |
எ-டு: உருமினை, உருமினொடு; திருமினை, திருமினொடு எனவரும். ஏனைய உருபொடும் ஒட்டிக் கொள்க. உரும் = இடியேறு. இது பெயர். திரு= திரும்புதல். இது தொழிற்பெயர். |
‘‘இடைவரூஉம்’’ என்றதனான் அத்துப்பெறுவன சிறுபான்மை இன்சாரியையை உடன் பெறுதலும் கொள்க. எ-டு :மரத்தினை, புலத்தினை எனவரும். |