சூ. 190 :

உயர்திணை யாயின் நம்இடை வருமே

(18)
 
க-து:

எல்லாம் என்பது உயர்திணைப் பெயராயவழி எய்தும் முறைமை
கூறுகின்றது.
 

பொருள்: மேற்கூறிய எல்லாம் என்னும் பொதுப்பெயர்  உயர்திணைப்
பெயராக    வருமாயின்   ஆண்டு நம்முச்சாரியை இடையேவரும். உம்மை
இறுதிக்கண் வரும்.
 

எ-டு: எல்லாநம்மையும்      எல்லாநம்மொடும்    எனவரும்.    பிற
உருபுகளொடும் ஒட்டுக. எல்லா நம்மையும் என்பது எல்லேமையும் என்னும்
பொருள்பட வந்ததாகும்.
 

எல்லாநம்மையும்   என்பதற்கு   எல்லாரையும்  என்பது பொருள் என
நச்சினார்க்கினியர் உரையுள் காணப்படுகின்றது. அஃது  ஏடெழுதினோரான்
நேர்ந்த பிழையாகலாம்.