சூ. 194 :அன்என் சாரியை ஏழன் இறுதி

முன்னர்த் தோன்றும் இயற்கைத் தென்ப
(22)
 

க - து :

ஏழ் என்னும் சொல் உருபொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள்: ஏழ்  என்னும்  எண்ணுப் பெயரிறுதிமுன் உருபு வருங்கால்
அன்  என்னும்  சாரியை  தோன்றுதல் இலக்கணமுடையது என்று கூறுவர்
புலவர்.
 

எ- டு: ஏழனை, ஏழனொடு, ஏழற்கு  எனவரும். பிறவற்றொடும் ஒட்டிக்
கொள்க.