சூ. 196 :நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும்

அப்பால் மொழிகள் அல்வழி யான
(24)
 

க - து :

மேலதற்கொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள்:  குற்றியலுகர  இறுதி   முன்னர்   இன்சாரியை தோன்றுவது
நெட்டெழுத்துத்தொடர்க் குற்றியலுகரத்தின்பின்  ஒற்றுமிகும்.   (குற்-புண-6)
ஒருசார் மொழிகள் அல்லாத ஏனைய சொற்களிடத்தேயாம்.
 

ஒற்றுமிகத்  தோன்றும்  எழுத்துக்களாவன டகரமும் றகரமுமாம். அவை
இயல்பாக வரும்  என   மேற்கூறுப.  அப்பால்  மொழிகள்  எனப்பன்மை
கூறியவதனான்   டகர  றகரங்களும்  சிறுபான்மை  தகரமும்   தொடர்ந்த
உயிர்த்தொடர்  மொழிகளுள்  சிலவும்  இயல்பாக   வருமெனக்  கொள்க.
எடுத்துக்காட்டு அந்நூற்பாவுரையுள் கண்டு கொள்க.