க-து:
பொருள்: எண்ணுப் பெயராக வரும் குற்றுகர ஈறுகள் உருபொடுபுணருங்கால் அன்சாரியையொடு பொருந்தி வரும்.
எ- டு: ஒன்றனை, இரண்டனை, மூன்றனை, நான்கனை, ஐந்தனை,ஆறனை, எட்டனை, ஒன்பஃதனை, பஃதனை, நூறனை எனவரும். ஏனையஉருபுகளொடும் ஒட்டுக.
‘‘குற்றிய லுகரத் திறுதி முன்னர்’’ (உருபு-23) என்னும் பொதுவிதியான் சிறுபான்மை ஒன்றினை, இரண்டினை என இன் சாரியை பெற்றுவருதலும் கொள்க.