சூ. 205 :

சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்

ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்

(3)
  

க - து :

அகரச்சுட்டு  மெல்லெழுத்துக்களொடு  புணருமாறு  கூறுகின்றது.
 

பொருள் : அகர   ஈறாகிய   சுட்டுச்சொல்லின் முன் ஞநம என்பவை
மொழிமுதலாகவரின், வந்த அம்மெல்லின ஒற்று இடையே மிகும்.
 

எ- டு: அஞ்ஞாண்,  அந்நூல்,  அம்மலர்  எனவரும்.   வரிவடிவைச்
சுட்டி நின்றவழி அஞ்ஞெளிர்த்தது, நீண்டது, மெலிந்தது எனவரும்.