சூ. 206 :யவமுன் வரினே வகரம் ஒற்றும்
(4)
 

க - து:

அகரச்சுட்டு  இடையெழுத்துக்களொடு  புணருமாறு  கூறுகின்றது.
 

பொருள் : மேற்கூறிய சுட்டுச்சொல்லின் முன் யகர  வகரங்கள்  வரின்
இடையே வகர ஒற்றுத்தோன்றும்.
 

எ- டு: அவ்யாழ், அவ்வளை எனவரும். வரிவடிவைச் சுட்டி அவ்யாது,
அவ்வளைந்தது எனவரும்.