சூ. 207 :உயிர் முன்வரினும் ஆயியல் திரியாது
(5)
 

க - து:

அகரச்சுட்டு உயிர் முதன்மொழியொடு புணருமாறு கூறுகின்றது.
 

பொருள : அகரச்சுட்டின் முன்  யகர   வகரமேயன்றி   உயிர் முதன்
மொழிவரினும் மேற்கூறியாங்கு   வகரஒற்று   இடையே   தோன்றுதலாகிய
இலக்கணம் திரிபடையாது. வகரம் ஒற்றிய வழி  அது   குறிற்கீழ்  ஒற்றாய்
நிற்றலின் இரட்டுமென அறிக.
 

எ- டு : அவ்வணி, அவ்வாடை, அவ்விலை  எனவரும். பிறவும் அன்ன
வரிவடிவைச் சுட்டி அவ்வழகிது எனவரும்.