சூ. 208 : | நீட வருதல் செய்யுளுள் உரித்தே |
(6) |
க - து : | அதன் முன் உயிர் வருவழிச் செய்யுள் வழக்கிற்குரிய விதி கூறுகின்றது. |
பொருள் : உயிர் முதன்மொழியாகி வருமிடத்து அகரச்சுட்டு நீண்டு வருதல் செய்யுள் வழக்கிற்குரியதாகும். |
எ- டு: ஆயிருதிணை - ஆயிருபாற் சொல் எனவரும். |
‘‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’’ (எச்ச-61) என்பதனான் ‘நீண்டு’ என்னும் செய்தெனெச்சம் திரிந்து நின்றது. அன்றி மாத்திரை நீடவருதல் என மாத்திரையை அவாய்நிலையாற் கொள்ளலுமாம். வரையறையின்மையின் யகர உடம்படுமெய் பெற்றது. |