சூ. 212 :உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்
(10)
 

க - து:

‘அம்ம’    என்னும்   சொல்லும்     ஈறுதிரியும்   என்கின்றது.
 

பொருள்: மேற்கூறிய அம்ம என்னும் உரையசைக்  கிளவியின் இறுதி,
நீண்டு வருதலையும் நீக்கார் ஆசிரியர்.
 

உம்மை   இறந்தது   தழீஇய   எச்ச உம்மை. இறுதி என்பது மேலைச்
சூத்திரத்தினின்று அதிகரித்தது.
 

எ. டு: அம்மா கொற்றா, சாத்தா, தேவா, பூதா  எனவரும்.  ஆசிரியர்
இந்நீட்சியை   விளிப்பெயரொடு       ஒப்பக்கொள்ளல்    வேண்டுமென
விளிமரபின்கண் விதந்து கூறுவார்.
 

இதுவும் நிலைமொழிச் செய்கையாதலின் இயல்புகணம்வரினும்  இந்நீட்சி
கொள்ளப்படும். எ. டு: அம்மா நாகா, வளவா, அழகா எனவரும்.