பொருள் : அகர ஈற்றுச் சொற்கள் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் (பின்னர் விதந்து கூறப்படுபவை தவிர்ந்த பிற எல்லாம்) மேல் அல்வழிப் புணர்ச்சிக்குக் கூறிய இலக்கணத்தொடு ஒத்த தன்மைத்தேயாம். அஃதாவது; கசதபக்கள் வரின் மிக்குப்புணரும் என்றவாறு.
எ. டு: இருவிளக்கொற்றன், சாத்தன், தேவன், பூதன் எனவரும். இருவிள என்பது ஓர் ஊர்ப்பெயர்; இருவிளவின்கண் வாழும் கொற்றன் என்பது பொருள்.