சூ. 219 : | அத்தவண் வரினும் வரைநிலை யின்றே |
(17) |
க - து: | மகவென்னும் சொற்கு அத்துச் சாரியையும் வருமென்கின்றது. |
பொருள்: மகவென்னும் சொல்லிடத்து இன்சாரியையே யன்றி அத்துச்சாரியை வரினும் நீக்கும் நிலைமையின்று. |
எ.டு: மகத்துக்கை, செவி, தலை, புறம் எனவரும். |
‘அவண்’ என்பதனான் மகப்பால்யாடு என வல்லெழுத்து மிகுதலும் கொள்க என்பார் நச்சினார்க்கினியர். சாரியை பெறாதவழிப் பொது விதியான் வல்லெழுத்துமிகுதல் கூறாமலே அமையுமென்க. ‘நிலை’ என்றதனான் மகம்பால்யாடு என மெல்லெழுத்துப் பெறுதலும் கொள்க என்பார் அவர். அதனைச் செய்யுள் விகாரமாகக் கோடலே நேரிதென்க. |