சூ. 220 :பலவற் றிறுதி உருபியல் நிலையும்
(18)
 

க - து:

அகர  ஈற்றுப்   பலவறி   சொற்காவதொருவிதி   கூறுகின்றது
 

பொருள் : பலவறி  சொற்களின்கண்   வரும்   அகரஇறுதி  உருபொடு
புணரும்  இலக்கணத்தை  ஒத்து  நிலைபெறும்   என்றது;  வற்றுச்சாரியை
பெற்றுப்புணரும் என்றவாறு.
 

எ டு : பலவற்றுக்கோடு, செதிள், தோல், பூ எனவரும்.  பல்ல,  சில்ல,
சில    என்பவற்றொடும்    நல்லன,    கரியன,     உண்டன   என்னும்
வினையாலணையும் பெயர்களொடும் ஏற்பன கூட்டிக் கண்டு கொள்க.