பொருள்: ஆ, மா என்னும் பெயர்களும் ஆகார ஈற்று விளியாக வரும் பெயர்ச் சொல்லும், யா என்னும் வினாப் பெயரும், ஆகார ஈற்று எதிர்மறை வினைமுற்றுச் சொல்லும், அவ்வினைப் பெயரும், ஏவற்பொருண்மை குறித்த சொல்லின்கண் உரையசையாக வரும் மியா என்னும் இடைச்சொல்லும், தன்மை இடம்பற்றி வரும் ஆகார ஈற்று வினாவினைச் சொல்லும் ஆகிய அவ்அனைத்துச் சொற்களும் கசதபக்கள் வரின் இயல்பாகப் புணரும் என்று கூறுவர் புலவர். |
எ. டு: ஆகுறிது; மாகுறிது, சிறிது, தீது, பெரிது எனவும் ஊராகேள்; கொற்றாகேள், செல், தா, போ எனவும் யாகுறிய, சிறிய, தீய, பெரிய எனவும் உண்ணாகுதிரைகள், தகர்கள், செந்நாய்கள், புலிகள் எனவும் உண்ணாகிடந்தன, சென்றன, தங்கின, போயின எனவும் கேண்மியா கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் உண்காகொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். |