எ. டு: இராக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் எனவும் இராக்காக்கை, இராக்கூத்து எனவும் வரும். இராநோன்பு, இராவனப்பு, இராவெல்லை என இயல்புகணத்தொடும் ஒட்டிக் கொள்க. இராஅக்காக்கை என அகரந் தோன்றின் அஃது எதிர்மறைப் பெயரெச்சப் பொருள் தரும் ஆதலின் பொழுது குறித்த சொல்லுக்கு அகரம் இல்லை என்றார். |