சூ. 229 : | யாமரக் கிளவியும் பிடாவும் தளாவும் |
| ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே |
(27) |
க - து: | ஒருசார் மரப்பெயர்கட்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது. |
பொருள்: யா, பிடா, தளா என்னும் ஆகாரஈற்று மரப்பெயர்களாகிய அம்மூன்று பெயர்களும் மெல்லெழுத்து மிக்குமுடியும். |
எ.டு: யாஅங்கோடு; பிடாஅங்கோடு; தளாஅங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
யா என்னும் வினாப் பெயரை நீக்குதற்காக யாமரக்கிளவியும் என்றார். உம்மையான் ஏனையவும் மரப்பெயர்கள் என்பதைப் பெற வைத்தார். |