சூ. 241 :

பனிஎன வரூஉம் கால வேற்றுமைக்கு

அத்தும் இன்னும் சாரியை யாகும் 

(39)
 

க - து:

பனி  என்னும்   சொற்குச்     சிறப்பு     விதி   கூறுகின்றது.
 

பொருள்: நோயை  உணர்த்தாமல்  பருவகாலமுணர்த்தி  வரும் பனி
என்னும் சொல்லுக்கு அத்தும் இன்னும் சாரியையாக வரும்.
 

எ. டு: பனியத்துக்     கொண்டான்;      பனியிற்     கொண்டான்,
சென்றான், தந்தான்,   போயினான்   எனவரும்.   அத்து   இடப்பொருள்
தோன்றச் சிறந்து நிற்றல் கருதி முற்கூறப்பட்டதென்க.