சூ. 243 : | உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே |
(41) |
க - து: | உதி என்னும் மரப்பெயர்க்கு மெல்லெழுத்துமிகும் என்கின்றது. |
பொருள்: உதி என்னும் மரப்பெயராகிய சொல் கசதபக்கள் வரின் அவற்றின் கிளையாகிய மெல்லெழுத்து மிகும். |
எ.டு: உதிங்கோடு, உதிஞ்செதிள், தோல், பூ எனவரும். |
உதிமரம் என்பது இருபெயரொட்டு. உதி என்பதைப் பல பொருளொரு சொல்லாகக் கருதி நச்சினார்க்கினியர் உதித்தல் என்னும் தொழிலன்றி மரத்தினை உணர்த்தி நின்றசொல் என உரை கூறுதல் பொருந்துமாறில்லை. ஆசிரியர்க்கு அது கருத்தாயின் உதியென வரூஉம் மரப்பெயர்க்கிளவி என விளங்க ஓதியிருப்பார். அன்றியும் உதித்தல் என்பது ஆரியச் சொல்லாதலையும் அறிக. அன்றியும் தொழிற்சொல் வேற்றுமைப்பொருள்படப் புணராதென்பதனையும் அறிக. இனி, உதியங்கோடு என அம்முப்பெறுதல் இடைக்கால வழக்காதலான் அதனைப் புறனடையாற் கொள்ளல் தகும். |