புளி என்னும் மரப்பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
பொருள் : புளி என்னும் மரப்பெயர்ச் சொல்லுக்கு அம்முச்சாரியையாகும். எ. டு: புளியங்கோடு, செதிள், தோல், பழம் எனவரும்.
புளி என்பது ஆகுபெயராய் மரத்தை உணர்த்தலன்றிப் பல பொருளொருசொல் அன்மையான், சுவையன்றிப் புளி என்னும் மரத்தை உணர்த்தும் சொல் என நச்சினார்க்கினியர் கூறுதல் ஏலாதென்க. ‘புளிங்காய்’ (ஐங்-51) என்பது செய்யுள் விகாரமென அறிக.