சூ. 245 :ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே 
(43)
 

க - து:

புளி   என்னும்   சுவைப் பெயர்க்குப் பிறிது விதி  கூறுகின்றது.
 

பொருள்: ஆகுபெயராய்    மரத்தை     உணர்த்தும்   சொல்லன்றி
இயற்பெயராகச் சுவையை உணர்த்தும்  ஏனையதாகிய புளி என்னும் பெயர்
மெல்லெழுத்து மிகும்.
 

எ.டு: புளிங்கூழ், புளிஞ்சோறு, புளிந்தயிர்,  புளிம்பாளிதம்  எனவரும்.