எ.டு: புளிக்கறி, புளிச்சோறு, புளித்துவையல், புளிப்பாகர் எனவரும். ‘‘ஒல்வழியறிதல் வழக்கத்தான’’ என்றதனான் கணவிரி-கூதாளி முதலியவை அம்முப்பெற்று இகரங்கெட்டு, கணவிரங்கோடு, கூதாளங்கோடு எனவும் கூதாளி என்பது அத்துப் பெற்றுக் கூதாளத்துத் தண்பூங்கோதையர் எனவருதலும் கொள்க. இனிக், கட்டிடி - கட்டகல் என்பவை மரூஉவாதலின் புறனடையாற் கொள்க. |