நாள்முன் வரூஉம் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன்இடை வருதல் ஐய மின்றே
க - து :
பொருள்: இகரஈற்று நாட்பெயரின் முன்னர்த் தோன்றி வரும்தொழில்நிலைச் சொற்கு இடையே ‘ஆன்’ என்னும் சாரியை வருதல்ஐயமின்று.
எ.டு: பரணியாற் கொண்டான், சென்றான், தந்தான், போயினான்எனவரும். ‘‘ஐயமின்று’’ என்றதனான் சிறுபான்மை இன் சாரியை வரினும்கொள்க.