சூ. 248 :திங்கள் முன்வரின் இக்கே சாரியை
(46)
 

க - து:

இகர ஈற்றுத்  திங்கட்பெயர்க்குச்  சிறப்பு   விதி  கூறுகின்றது.
 

பொருள : இகர ஈற்றுத் திங்கட்பெயர்  முன்னர்த்   தொழில்  நிலைச்
சொல்வரின் இடையே இக்குச்சாரியை வரும்.
 

எ.டு: ஆடிக்குக்  கொண்டான்,  சென்றான்,   தந்தான்,   போயினான்
எனவரும்.