சூ. 249 :ஈகார இறுதி ஆகார இயற்றே 
(47)
 

க - து:

ஈகார    ஈற்று      அல்வழிப்புணர்ச்சியாமாறு   கூறுகின்றது.
 

பொருள : ஈகார ஈற்றுப்பெயர் ஆகார ஈற்றிற்கு ஓதிய இயல்பிற்றாகும்.
என்றது; கசதபக்கள்வரின் மிக்குமுடியும் என்றவாறு.
 

எ. டு: ஈக்கடிது,     சிறிது,       தீது,      பெரிது     எனவரும்.