சூ. 256 :ஏனவை வரினே மேனிலை இயல்பே 
(54)
 

க - து:

உகரச் சுட்டின் முன் ஏனைக் கணங்கள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள : உகரச்சுட்டின்முன்  வல்லின  மல்லாத  ஏனைக்  கணங்கள்
வரின் மேல்  அகரச்   சுட்டிற்குக்   கூறிய  இலக்கணமேயாகும்.  ஏகாரம்
-இசைநிறை, ஈற்றசை.
 

எ. டு: உஞ்ஞாண்,  நூல், மணி எனவும் உவ்யாழ், உவ்வட்டு எனவும்
உவ்வணி, உவ்வாடை எனவும் ஊவயினான எனவும் வரும்.