சூ. 257 :சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே
(55)
 

க -து:

உகர   ஈற்றுச்   சுட்டுப்   பெயர்   புணருமாறு   கூறுகின்றது.
 

பொருள : சுட்டெழுத்துக்களை  முதலாக  உடைய உகர ஈற்றுச்சுட்டுப்
பெயரிறுதி இயல்பாகும்.
 

எ. டு: அதுகுறிது,  சிறிது,   தீது,   பெரிது  எனவரும்.  இது,   உது
என்பவற்றொடும் அவ்வாறே ஒட்டிக் கண்டு கொள்க.