சூ. 261 :

ழகர உகரம் நீடிட னுடைத்தே

உகரம் வருதல் ஆவயி னான

(59)
 

க - து

ழகர    உகரச்   சொல்லிற்குச்   சிறப்பு   விதி   கூறுகின்றது.
 

பொருள் : ழகரத்தை   ஊர்ந்து   சொல்லிறுதியாக   நிற்கும்  உகரம்
நீடுமிடனுடைத்து, நீண்டவழி ஓர் உகரம் அவ்விடத்து வருதலைச் செய்யும்.
 

எ. டு: எழூஉக்கதவு,   எழூஉச்சிறை;   குழூஉத்தானை,  குழூஉப்படை
எனவரும்.     ‘‘எழூஉத்தாங்கிய     கதவுமலைந்தவர்   குழூஉக்களிற்றுக்
குறும்புடைத்தலின்’’  (புறம் - 97)  ‘பழூஉப் பல்லன்ன பாவுகிர்ப்  பாவடி’’
(குறுந். 59) எனவரும்.
 

‘இடனுடைத்தே’   என்றதனால்       கொழுக்கடை,   குழுத்தோற்றம்
எனத்திரியாது வருதலும் கொள்க. இத்திரிபு செய்யுளின்கண் பயின்றுவரும்.