சூ. 262 :ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே
(60)
 

க - து:

ஒடு வென்னும் மரப்பெயர்க்குச் சிறப்பு விதி கூறுகின்றது.
 

பொருள் : ஒடு  என்னும்   மரத்தை   உணர்த்தும்   பெயர்,   மேல்
உதிமரத்திற்குக்   கூறிய    இயல்பிற்றாகும்.    என்றது;   மெல்லெழுத்து
மிக்குமுடியும் என்றவாறு.
 

எ. டு: ஒடுங்கோடு,   செதிள், தோல், பூ  எனவரும். ஒடுவங்கோடென
அம்முப்பெறுதல் பிற்கால வழக்காதலின் புறனடையாற் கொள்க.