சூ. 265 :

வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்

நினையுங் காலை அவ்வகை வரையார்

(63)
 

க-து:

ஊகாரஈற்று  ஒருசார் வினைச்சொற்களுக்கு அவ்விதி எய்தும்
என்கின்றது.
 

பொருள்:ஊகார   ஈற்று  வினையெச்சச்   சொல்லுக்கும், (முதனிலை
ஏவலாக வரும்)  முன்னிலை  வினைச்  சொல்லுக்கும் கருதுமிடத்து மேலே
வகுத்துக் கூறிய இலக்கணத்தை நீக்கார்.
 

எ.டு :உண்ணூக்கொண்டான்,   சென்றான்,   தந்தான்,   போயினான் எனவும்    கைதூக்கொற்றா,   சாத்தா,  தேவா,  பூதா   எனவும்  வரும்.
தூக்கொற்றா  -  பூக்கொற்றா  என   ஓரெழுத்து   மொழியாயும்  வரும்.
(தூ-தூவுவாயாக, பூ-பொலிவுறுவாயாக)