பொருள்:மலரைக் குறித்துவரும் பூ என்னும் ஒரு பெயர்ச்சொல் மேற்கூறிய உகரம் பெறுதலாகிய அவ்விலக்கணத்ததன்று. பொதுவிதியான் வல்லெழுத்து மிகுதலேயன்றி அவ்விடத்து மெல்லெழுத்து மிகுதலும் உரித்து. உம்மை எச்ச உம்மை.
எ. டு:பூங்கொடி, சோலை, தார், பந்து எனவும் பூக்கொடி,பூச்செடி, பூத்தொடை, பூப்பந்தர் எனவும் வரும். பூ என்பது பொலிக எனப் பொருள்தரும் ஏவல்வினையுமாகலின் அதனை நீக்குதற்குப் பெயர் என விதந்தார்.