பொருள் :தசையை உணர்த்தி வரும் ஊ என்னும் பெயர்ச்சொல், ஆ என்னும் பெயரொடு ஒத்த விதிபெறும். அஃதாவது: னகர ஒற்றாகிய சாரியை பெறும் என்றவாறு.
எ. டு:ஊன்குறை, ஊன்சிதைவு, தகவு, பொலிவு எனவரும். ‘ஆன்’ என்பது போல இச்சொல்லும் ஊன் என ஒன்றியே நிற்றலின் சிவணும் என்றார். ஊ என்னும் சுட்டெழுத்து நீட்சியாகிய இடைச்சொல்லை நீக்குதற்கு ஊ என்னும் ஒருபெயர் என்றார்.