சூ. 270 :

அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே

தக்கவழி யறிதல் வழக்கத் தான

(68)
 

க-து:

இதுவுமது.
 

பொருள் :  மேற்கூறிய   ஊ   என்னும்   பெயர்  னகர   ஒற்றொடு
அக்குச்  சாரியை  உடன்  பெறுதலும்  உரித்தாகும். அங்ஙனம் பெறத்தக்க
இடம் சான்றோர் வழக்கினானே அறிந்து கொள்க.
 

எ. டு:  ஊனக்குறை,    செறிவு,   தளர்வு,   பொலிவு     எனவரும். ‘தக்கவழியறிதல்’  என்பதனான் இவ்விதி இயல்புகணத்தும் ஏற்பனவற்றொடு பொருந்திவருதல்  கொள்க.  எ. டு:  ஊன்  ஞாற்சி; ஊனஞாற்சி, மெலிவு, யாக்கை, வளர்ச்சி எனவும் ஊன் அழகு, ஆட்சி எனவும் வரும்.
 

அக்குச் சாரியையும் ஆறாவதன் உருபையும் வேறுபடுத்துணர்க என்பார்.
‘தக்கவழியறிதல்’ என்றார்.