சூ. 271 :

ஆடூ மகடூ ஆயிரு பெயர்க்கும்

இன்னிடை வரினும் மான மில்லை 

(69)
 

க-து :
 

ஆடூவும் மகடூவும் இன்சாரியை பெறுமென்கின்றது.
 

பொருள்:ஆடூ மகடூ என்னும்  அவ்இரண்டு  உயர்திணைப் பெயர்க்கும்
வல்லெழுத்து மிகுதலேயன்றி, இடையே இன்சாரியை வரினும்  குற்றமில்லை. உம்மை எச்ச உம்மை.
 

எ. டு:ஆடூவின்கை; மகடூவின்கை, செவி, தலை, புறம் எனவரும்.