எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாயவழி எய்தும் விதி கூறுகின்றது.
பொருள் :தேற்றப் பொருளில் வரும் எகரமும் சிறப்புப் பொருளில் வரும் ஒகரமும் பெயர்க்கீறாக நிற்குமிடத்து மேலே முன்னிலைக்கண் வல்லெழுத்து மிகும் எனப்பட்ட இலக்கணமாகிய வல்லெழுத்துக்கள் இவற்றின்கண் மிகா. என்றது; பெயர்க்கீறாய வழி இயல்பாகும் என்றவாறு.
எ. டு:யானேஎ கொண்டேன், சென்றேன், தந்தேன், போயினேன், எனவும் யானோஒ கூறினென், செய்தனென், தந்தனென், பார்த்தனென் எனவும் வரும்.
ஏனைப் பெயர்களொடும் பொருந்தும் வினைகளைக் கூட்டிக் கண்டு கொள்க.