சூ. 275 : | மாறுகொள் எச்சமும் வினாவும் எண்ணும் |
| கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும் |
(73) |
க-து: | ஏகார இடைச்சொற்கள் பெயர் வினைகளொடு சார்ந்து நின்று புணருமாறு கூறுகின்றது. |
|
பொருள் :ஏகார இடைச்சொல் எதிர்மறைப் பொருளினும் வினாப் பொருளினும் எண்ணுப் பொருளினும் பெயரொடு கூடி ஈறாயவழி பொதுவிதியாக ஓதப்பட்ட வல்லெழுத்து மிகாமல் இயல்பாகப் புணரும். |
எ.டு :யானே கொண்டேன்? (யான் கொண்டிலென் என்பது எச்சப் பொருள்) நீயே கொண்டாய்? நிலனே, தீயே, காற்றே எனவும் வரும். பிற வல்லெழுத்துக்களொடும் ஒட்டிக் கொள்க. |
பிரிநிலையும் ஈற்றசையும் அப் பொருள்நிலைமையான் இயல்பாதல் பெறப்படுமாகலான் எடுத்தோதிற்றிலர். அன்றிக் “கூறிய’’ என்பதனை மிகையாக்கி அதனாற் கோடலுமாம். |
எ.டு : அவருள்யானே பெரியென் எனவும் கழியே சிறுகுரல் நெய்தலொடு பாடோ வாதே எனவும் வரும். |