|
சூ. 277 : | ஏஎன் இறுதிக்கு எகரம் வருமே | (75) | | க-து: | எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது. | பொருள் :ஒருசார் ஏகார ஈற்றுச் சொல்லிறுதிக்கு எகரம் தோன்றி வரும். | எ. டு: ஏஎக்கொட்டில், ஏஎச்சாலை, துளை, புழை என வரும். எகரப்பேற்றினை மேலதனொடு ஒருங்கு கூறாமையான் இயல்பு கணத்திற்கும் எகரம் வருதல் கொள்க. | எ.டு :ஏஎஞாற்சி, நேர்மை, வன்மை, அழகு எனவரும். |
|