|
சூ. 278 : | சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே | (76) | | க-து : | சே என்னும் மரப்பெயர் மெல்லெழுத்துப் பெறும் என்கின்றது. | பொருள் :சே என்னும் விலங்கினை உணர்த்தாமல் மரத்தை உணர்த்தி நிற்கும் பெயர்ச்சொல், ஒடு என்னும் மரப்பெயர்க்குக் கூறிய இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு வரும் என்றவாறு. | எ. டு:சேங்கோடு, செதிள், தோல், பூ எனவரும். |
|