|
சூ. 281 : | சுட்டு முதலிறுதி உருபியல் நிலையும் | (79) | | க-து: | ஐகார ஈற்றுச் சுட்டுப்பெயர் புணருமாறு கூறுகின்றது. | | பொருள் :சுட்டெழுத்தினை முதலாகக் கொண்ட ஐகார ஈற்றுப் பெயரிறுதி வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் உருபிற்கு ஓதிய இலக்கணத்தான் நிலைபெறும். என்றது; வற்றுச்சாரியை பெற்றுப் புணருமென்றவாறு. | எ. டு:அவையற்றுக்கோடு; இவையற்றுக்கோடு, செவி, தலை, புறம் எனவரும். | வருமொழி வரையாது கூறினமையின் சாரியைப் பேறு இயல்புகணத்தும் கொள்க. எ.டு : அவையற்று நெஞ்சு, வயிறு, அழகு எனவரும். வற்றின் வகரக்கேடு புணரியலுட் கூறப்பட்டது. |
|