சூ. 282 :விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்

ஆமுப் பெயரும் சேமர இயல
(80)
 

க-து:

ஐகார ஈற்றுச் சிலமரப் பெயர்கள் புணருமாறு கூறுகின்றது.
 

பொருள் :விசை  என்னும்  மரத்தை உணர்த்தும் சொல்லும் ஞெமை,
நமை  என்னும்  மரப்பெயர்களும்  ஆகிய   மூன்று  பெயர்ச்  சொல்லும்
சேஎன்னும் மரத்திற்கு ஓதிய இலக்கணத்தனவாம்.
 

அஃதாவது; ஒத்தமெல்லெழுத்து  மிக்குப்புணரும் என்றவாறு. விசைமரக்
கிளவியொடு  ஒப்பக் கூறினமையின்  ஞெமை, நமை என்பவை மரப்பெயர்
என்பது பெற்றாம்.
 

எ. டு:விசைங்கோடு; ஞெமைங்கோடு; நமைங்கோடு, செதிள், தோல், பூ
எனவரும்.
 

ஒன்றென முடித்தல்; தன்னின  முடித்தல்  என்பதனான்  உழை, அமை, உடை என்னும் மரப்பெயர்களுக்கும் இவ்விதி கொள்க.
 

எ.டு :உழைங்கோடு;  அமைங்கோடு; உடைங்கோடு,  செதிள், தோல்,
பூ எனவரும்.