|
சூ. 283 : | பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் | | நினையுங் காலை அம்மொடு சிவணும் | | ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே | | மெய்யவண் ஒழிய என்மனார் புலவர் | (81) | க-து: | ஐகார ஈற்று மரப்பெயர்ச் சிலவற்றிற்கு வேறுவிதி கூறுகின்றது. | | பொருள்:ஐகார ஈற்று மரப்பெயர்ச் சொற்களை ஆராயுமிடத்துப், பனை என்னும் சொல்லும், அரை என்னும் சொல்லும், ஆவிரை என்னும் சொல்லும் அம்முச்சாரியையொடு பொருந்திப் புணரும்; ஆண்டு இறுதி ஐகாரம் அரை என்னும் சொல்லைத் தவிர்த்து ஏனை இரண்டிலும் தான் ஊர்ந்து நின்றமெய் கெடுதலைத் தவிர்த்துத்தான் மட்டும் கெடும் என்று கூறுவர் புலவர். | எ.டு:பனங்காய், செதிள், தோல், பூ எனவும் ஆவிரங்கோடு, செதிள், தோல், பூ எனவும் அரையங்கோடு, செதிள், தோல், பூ எனவும் வரும். | ‘‘நினையுங்காலை’’ என்றதனான் தில்லை, தாழை என்னும் மரப்பெயர்களும் இறுதி ஐகாரங்கெட்டு அம்முப்பெறுதல் கொள்க. எ.டு: தில்லங்காய், செதிள், தோல், பூ- தாழங்காய், செதிள், தோல், பூ எனவரும். தூதுளை, வழுதுணை, ஓலை முதலியன மரப்பெயர்கள் அல்லவாதலின் அவை அம்முப் பெறுதல் புறனடையாற் கொள்ளல்தகும். |
|