க-து:
பொருள் :ஐகார ஈற்றுத் திங்கட்பெயரும் நாட்பெயரும் இகர ஈற்றுள்கிளந்துகூறிய அவ்விதியினவாகும். என்றது; திங்கட்பெயருக்குஇக்குச்சாரியையும், நாட்பெயருக்கு ஆன்சாரியையும் வரும் என்றவாறு.
எ. டு:தைக்குக்கொண்டான், சித்திரைக்குக்கொண்டான் எனவரும்.இவை திங்கட்பெயர். கேட்டையாற் கொண்டான், சித்திரையாற் கொண்டான்எனவரும். இவை நாட்பெயர்.